கத்தாருக்கு பணிக்காக அல்லது சுற்றுலா நோக்கில் பயணிக்கும் அனைவருக்கும் சுகாதார காப்பீடு (Health Insurance ) கட்டாயம் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடைபிடிக்கப்படவுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது,
கத்தாரிலுள்ள தொழில் வழங்குநர்கள், தங்களது ஊழியர்களுக்கு சுகாதார காப்பீடு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதாகவும் அமைச்சு தெளிவுபடுத்துள்ளது. இவ்வாறு சுகாதார காப்பீடு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, சீரான சுகாதார சேவைகளை வழங்க உதவும் எனவும் அமைச்சு கூறியுள்ளது.
கடந்த புதன்கிழமை (அக்-20) சுகாதார சேவைகள் தொடர்பான 2021ம் ஆண்டி 22ம் இலக்க சட்ட விதிகள் மாற்றம் செய்யப்பட்டன. இந்த சட்டங்களானது, 6 மாதங்களின் பின்னர் மாற்றங்கள் அமூலாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன் படி கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் கத்தாரை தரிசிக்கும் பயணிகள் போன்றவர்கள் அடிப்படையான சுகாதார காப்பீட்டு நடைமுறைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக விபரிக்கப்பட்டுள்ளது.
இந்த சுகாதாரக் காப்பீடு வழிமுறையானது கத்தாரின் சுகாதாரத் துறையின் சீரான செயற்பாடுகளுக்கு உதவியாக அமையும் என்பதோடு, கத்தாரில் பணிபுரியும் ஒருவர் தங்களது குடும்ப உறுப்பினா்களை கத்தாருக்கு அழைத்துவரும் போதும் சுகாதார காப்பீடு வசதிகளை ஏற்படுத்திக் கொள்வது கட்டாயமாகும் என்பதாக கத்தார் சுகாதார அமைச்சின் ஆலோசகர் Khalid al-Mughesib அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கத்தாரில் கொரோனா PCR பரிசோதனை நிலையங்களின் புதிய பட்டியல்!