கத்தாரிலிருந்து உம்ரா செல்ல இருப்போருக்கான முக்கிய அறிவித்தல், போலி முகவர்களிடம் ஏமாற வேண்டாம்.

authorized to arrange Umrah tours from Qatar

கத்தாரிலிருந்து சவுதி அரேபியாவுக்கு உம்ரா செல்ல இருப்போருக்கு கத்தார் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. உம்ராவுக்கு அழைத்துச் செல்ல 11 சுற்றுலா நடத்துபவர்களுக்கு( tour operators) மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோக பூர்வமான அனுமதி அளிக்கப்பட்டுள்ள சுற்றுலா நடத்துபவர்களது விபரங்கள் அவ்காப்யினது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கத்தார் இஸ்லாமிய விவகார அமைச்சில் இயங்கும், ஹஜ், உம்ராவுக்கான திணைக்களத் தலைவர் Ali Sultan Al Misifiri.  அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கத்தார் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயெ அவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்கள். உம்ரா பயணங்களை மேற்கொள்பவர்கள், Tawakkalna’ and ‘Eatmarna போன்ற செயலிகளில் தங்களைப் பதிவு செய்து கொள்வது அசியமாகும். இதன் மூலம் உம்ரா மற்றும் ஐந்து நேரத் தொழுகைக்கான இலத்திரனியல் அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

அத்துடன் உம்ரா செல்பவர்கள் சவுதி அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவர பின்பற்ற வேண்டும் எனவும், ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற விரும்பினால் 132 என்ற ஹொட்லைன் யில் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்கள்.

அனுமதி வழங்கப்பட்டுள்ள 11 சுற்றுலா நடத்துபவர்களுக்கு( tour operators)

  1. Taiba for Hajj and Umrah;
  2. Ansar for Hajj and Umrah;
  3. Bin Darwish for Hajj and Umrah;
  4. Al Furqan for Hajj and Umrah;
  5. Alquds for Hajj, Umrah and Tourism;
  6. Nosook for Hajj and Umrah;
  7. abbaik for Hajj and Umrah;
  8. Dorrat Makkah for Hajj and Umrah;
  9. Hatem for Hajj and Umrah;
  10. Alnoor for Hajj and Umrah;
  11. Al Hamadi for Hajj and Umrah.

இதையும் படிங்க : கத்தாரிலிருந்து சவுதிக்கு உம்ரா சேவைகள் ஆரம்பம்! வெளிநாட்டவர்களும் பயணிக்கலாம்

Leave a Reply