கத்தாரிலிருந்து சவுதிக்கு உம்ரா சேவைகள் ஆரம்பம்! வெளிநாட்டவர்களும் பயணிக்கலாம்

Umrah Service Start to KSA from Qatar

கத்தாரிலிருந்து சவுதி அரேபியாவுக்கான உம்ரா சேவைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும், வெளிநாட்டவர்கள் உட்பட கத்தாரிலுள்ள அனைவரும் பயணிக்க முடியும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் அனுமதி வழங்கப்பட்ட உம்ரா சேவை முகவர்கள் உம்ராவுக்கான பயண ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர் என்பதாகவும், கத்தார் பிரஜைகள் உட்பட கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்களும் உம்ராவுக்கு பயணிக்க முடியும் என்பதாக இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு (அவ்காப்) தெரிவித்துள்ளது.

கத்தாரிலிருந்து சவுதிக்கு உம்ராவுக்குப் பயணிக்கும் போது சவுதி அதிகாரிகளால் வேண்டப்படும் நிபந்தனைகளை பக்தர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதாகவும், உம்ரா தொடர்பான தகவல்களைப் பரிமாற 132 என்ற தொலைபேசி இலக்கம் (hotline – 132) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஹஜ் மற்றும் உம்ராவுக்குப் பொறுப்பான திணைக்களத்தின் தலைவர் Ali Sultan Al Misifiri அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கான வீசா அனைத்து பயண ஏற்பாடுகளை அனுமதி வழங்கப்பட்ட உம்ரா சேவை முகவர்கள் ஏற்பாடு செய்வார்கள் என்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் PCR பரிசோதனைக் கட்டணம் 160 ரியால்களாக குறைப்பு!

Leave a Reply