QatarQatar Tamil News

முறையான வீசா அனுமதியின்றி கத்தாரில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு உள்துறை அமைச்சின் அறிவித்தல்

கத்தாரில் முறையான சட்ட அனுமதியின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களது வீசாக்களை சட்ட ரீதியாக மாற்றிக்கொள்ள அக்டோபர் 10 திகதி முதல் டிசம்பர் 31ம் திகதி வரை சலுகை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவித்தலை கத்தார் உள்துறை அமைச்சு (MoI) இன்று வெளியிட்டுள்ளது.

கத்தாரின் 2015ம் ஆண்டின் 21ம் இலக்க சட்டமானது  வெளிநாட்டவர்கள் கத்தாருக்கு பயணித்தல் மற்றும் கத்தாரிலிருந்து வெளியேறுதல் பற்றி விபரிக்கின்றது. வெளிநாட்டவர்கள் வீசா தொடர்பான  மேற்படி விதிகளை மீறியிருந்தால் அவற்றை மேற்படி சலுகை காலத்தினும் சரி செய்து கொள்ள முடியும்

கத்தாரில் வீசா தொடர்பான விதிகளை மீறியுள்ளவர்கள் நல்லிணக்கத்திற்கான கோரிக்கையை உள்றை அமைச்சின் கீழ் இயங்கும் Search and Follow-up Department யில் சமர்ப்பிக்க முடியும். அல்லது உம்மு ஸலால், உம்மு சுனைம், மிசைமிர், அல்-வக்ரா மற்றும் அல்-ராய்யான் ஆகிய இடங்களில் அமைந்துள்ள உள்துறை அமைச்சின் நிருவாக சேவை மத்திய நிலையங்களை நாட முடியும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சின் நிருவாக சேவை மத்திய நிலையங்களை நாடுபவர்கள் பிற்பகல் 1 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இடையில் பயணங்களை அமைத்துக்கொள்ளும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சலுகை காலத்தினால்,

  • வதிவிட விதிகளை மீறியுள்ள வெளிநாட்டவர்கள்,
  • வேலைவாய்ப்பு வீசா விதிகளை மீறியுள்ள வெளிநாட்டவர்கள்,
  • குடும்ப வீசா விதிகளை மீறியுள்ள வெளிநாட்டவர்கள் போன்றவர்கள் பயன் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே தொழில் வழங்குநர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் போன்றவர்கள் வழங்கப்பட்டுள்ள சலுகை காலத்தில் வீசா தொடர்பான அனைத்து விதி மீறல்களையும் நிவர்த்தி செய்து கொள்ளும் படி உள்துறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரிலிருந்து சவுதிக்கு உம்ரா சேவைகள் ஆரம்பம்! வெளிநாட்டவர்களும் பயணிக்கலாம்

Related Articles

Leave a Reply

Back to top button
%d