கத்தாரில் வீட்டுத் தொழிலாளர்களாக ( Domestic Worker ) பணி புரிவோர் அறிந்திருக்க வேண்டிய சட்டங்கள் மற்றும் அவர்களது பொறுப்புக்கள் பற்றிய தெளிவுகள் அடங்கிய காணொளியை கத்தார் நிர்வாக மேம்பாட்டு தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
- தொழிலைப் பெற்றுக்கொள்ள யாருக்கும் எந்த வித கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை
- வேலை வழங்கியதற்காக ஸ்பான்சர் உங்களது சம்பளத்தில் குறைப்புசெய்ய முடியாது.
- பணி புரிய ஆரம்பிக்கும் முன் பணியாளர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
- கத்தாரின் வீசா மையங்கள் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அந்தந்த நாடுகளில் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் இருக்கும் விடயங்கள் பணியாளர்கள் அறிந்திருப்பது அவசியம்.
- வேலைவாய்ப்பு ஒப்பந்த பிரதி ஒன்றை பணியாளர்கள் கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- கடவுச்சீட்களை தாங்களுடன் வைத்துக்கொள்ளும் உரிமை பணியாளர்களுக்கு உண்டு. கத்தார் அலுவலக வேலைகளுக்காக ஸ்பான்சர் உங்களுடைய கடவுச்சீட்டை வாங்கினால் அவர்கள் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்
- பணியாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு போன்றவை இலவசமாக வழங்கப்படல் வேண்டும். கட்டணம் அறவிடப்படமுடியாது
- சம்பளம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். மேலும் மாதாந்தம் 3ம் திகதிக்கு முன்னர் சம்பளம் செலுத்தப்படல் வேண்டும்.
- நாள் ஒன்றுக்கு 10 மணித்தியாலங்கள் மட்டுமே பணி புரிய வேண்டும்
- வாரத்துக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்கப்படல் வேண்டும்
- மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்படல் வேண்டும். குறிப்பாக ஆரோக்கிய அட்டை (Health Card) ஸ்பான்சரினால் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும்.
- வருடத்துக்கு 3 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படல் வேண்டும். இது தொடர்பாக ஸ்பான்சருடன் கலந்துரையாடுங்கள்.
- ஒப்பந்த காலம் முடிந்த பின்னர் பணிக்கொடை(End of Service) கட்டாயம் வழங்கப்படல் வேண்டும்.
- ஒப்பந்த இரத்துச் செய்யும் அதிகாரம் பணியாருக்கும் உண்டு. ஸ்பான்சருக்கும் உண்டு.
- மேலதிக தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய 16008 என்ற இலக்கத்துக்கு அழையுங்கள்.
Domestic Labour law in Qatar
இதையும் படியுங்கள் : கத்தாரில் பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியச் சட்டம்! இன்று (மார்ச் 20) முதல் நடைமுறைக்கு!