கத்தாரில் பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியச் சட்டம்! இன்று (மார்ச் 20) முதல் நடைமுறைக்கு!

Minimum-Wage-Law-in-Qatar

கத்தாரில் பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியச் (Salary) சட்டம் மார்ச் 20 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பான 2020 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கச் சட்டம், வீட்டுத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மாதத்திற்கு QAR 1,000 என்ற அடிப்படை ஊதியமாகவும், ஒரு மாதத்திற்கு தங்குமிட கட்டணத்தை QAR 500 ஆகவும் அண்மையில் அறிவித்திருந்தது. முதலாளி பணியாளர் அல்லது வீட்டுப் பணியாளருக்கு போதுமான உணவு அல்லது தங்குமிடத்தை வழங்காவிட்டால், தங்குமிடத்துக்காக 500 றியால்களும், உணவுக்காக 300 றியால்களும் வழங்கப்படுதல் அவசியமாகும்.

அந்த அடிப்படையில்
மாத அடிப்படைச் சம்பளம் – QAR 1,000
தங்குமிட கட்டணம் – QAR 500
உணவுக் கட்டணம் – QAR 300
என்பதாக பணியாளர்களின் ஏப்ரல் மாத சம்பளம் (Salary) அமைதல் வேண்டும்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இந்த சட்ட மாற்றம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், உரிய நிறுவனங்களும் இணைந்து செயற்படுவதாக கத்தார் தொழிலாளர் நல அமைச்சு தெரிவித்திருந்தது. உரிய நிறுவனங்களுக்கு தொழிலாளர் அமைச்சினால் அறிவிக்கப்பட்டு அவை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ILO) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

More in English

இந்த செய்தியையும் படியுங்கள் – கத்தாரில் 152 அறைகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள மிதக்கும் ஹோட்டல்!

Leave a Reply