கத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா? அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்?

how-to-complaint-salary-problem-in-qatar

பணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் (Salary) வழங்கும் விசயத்தில் கத்தார் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும் வகையில், மாதம் தோறும் பணியாளர்களின் வங்கி கணக்குக்கு ஊதியம் செலுத்தும் முறையினைக் கட்டாயமாக்கியுள்ளது. (Salary Problem)

இதன்படி, எல்லா நிறுவனங்களும் தங்களின் பணியாளர்களுக்குரிய ஊதியத்தை, வேலை செய்த மாதம் முடிந்துவரும் அடுத்த மாதத்தின் 5 ஆம் தேதிக்குள் பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தியாக வேண்டும். இதற்கு Wages Protection System – WPS என்ற முறையினை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது.
 
இம்முறையில் ஒவ்வொரு பணியாளருக்கும் கட்டாயமாக வங்கி கணக்கு துவங்கியாக வேண்டும். அதிலேயே அவர்களின் மாத ஊதியங்கள் செலுத்தி வரவு வைக்க வேண்டும்.
 
இதனைக் கடைபிடிக்காத நிறுவனங்கள், ஒரு பணியாளருக்கு 2000 கத்தர் ரியால் வரை ஒவ்வொரு மாதமும் அபராதம் செலுத்தும் நிலை ஏற்படும். ஆகவே, தற்போது பெரும்பாலானா நிறுவங்களும் இம்முறையினைக் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளன.
 
இதற்கு மேலும் ஊதியம் வழங்குவதில் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுமானால், சம்பந்தப்பட்ட பணியாளர் தம்முடைய பணி ஒப்பந்த (Employment Labour Contract) நகலுடன் லேபர் டிபார்ட்மென்டை அணுகலாம்.
 
சில நிறுவனங்கள் பணி ஒப்பந்த நகலைப் பணியாளர்களுக்கு வழங்குவதில்லை. அவ்வாறான பணியாளர்கள் தம் பணி ஒப்பந்த நகலைக் கீழ்கண்ட இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளவும் கத்தர் அரசு வழிவகை செய்துள்ளது.
 
இத்தளத்தில் பணியாளர்கள் தமது கத்தர் ஐடி எண்ணினையும் தம் ஐடி எண் மூலம் எடுத்த மொபைல் நம்பரையும் உள்ளீடு செய்தால், OTP என்ற வெரிஃபிகேசன் எண் அந்த மொபைலில் கிடைக்கும். அதனை இதில் உள்ளீடு செய்தால், பணி ஒப்பந்தத்தின் நகல் கிடைக்கும்.
 
பணி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதற்கு மாற்றமாக ஊதியம் வழங்கும் நிறுவனங்களையும் இதன் மூலம் நடவடிக்கைக்கு உள்ளாக்கி, அதுவரையிலான முழு ஊதியத்தையும் பணியாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். (அப்துர் ரஹ்மான்)
 
Contact Details
இணையம் Labour Department
இண்ஸ்டக்கிராம்- https://www.instagram.com/ADLSAQa
டுவிட்டர் – https://twitter.com/ADLSAQa
முகநூல் – https://www.facebook.com/ADLSAQA
தொலைபேசி இலக்கம் – 4028 8888
Telephone-Numbers
Telephone-Numbers
Thanks to – Abdur Rahman) (Salary Problem)

இதையும் படியுங்கள் : கத்தாரில் வீட்டுத் தொழிலாளர்களாக பணி புரிவோர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சட்டங்கள் (வீடியோ)

Leave a Reply