இன்று(2024.06.20) வெளியிடப்பட்ட ஜூன் மாதத்திற்கான ஃபிஃபா தரவரிசையில் கத்தார் தேசிய கால்பந்து அணி உலக அளவில் 35வது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி தரவரிசையில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பிரான்ஸ் தொடர்ந்து இரண்டாவது இடத்திலும், பெல்ஜியம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
பிரேசில் ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்துக்கும், இங்கிலாந்து ஒரு இடம் சரிந்து ஐந்தாவது இடத்திற்கும் வந்துள்ளது.
போர்ச்சுகல் ஆறாவது இடத்திலும், நெதர்லாந்து ஏழாவது இடத்திலும், ஸ்பெயின் எட்டாவது இடத்திலும் உள்ளன. குரோஷியா ஒரு இடம் முன்னேறி ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் இத்தாலி ஒரு இடம் சரிந்து பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மொராக்கோ தேசிய அணி, ஆப்பிரிக்க கண்ட தரவரிசையில் தனது முன்னிலையை தக்க வைத்து 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கிடையில், ஆசிய கண்ட தரவரிசையில் ஜப்பான் முன்னணியில் உள்ளது, உலகளவில் 17 வது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read: கத்தாரில் நீங்கள் கட்டாயம் சுற்றிப் பார்க்க வேண்டிய 7 இடங்கள்!