நடுவானில் கத்தார் ஏர்வெய்ஸ் விமானம் ஆட்டங்கண்டதில் 12 பேருக்குக் காயம்

12 people injured during turbulence on Qatar Airways flight

டோஹாவில் (Doha) இருந்து அயர்லந்துக்குச் (Ireland) சென்றுகொண்டிருந்த Qatar Airways விமானம் ஆட்டங்கண்டதில் 12 பேர் காயமுற்றதாக டப்ளின் (Dublin) விமான நிலையம் தெரிவித்தது.

Boeing 787 Dreamliner ரக QR017 விமானம் திட்டமிட்டபடி பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் விமான நிலையக் காவல்துறையும் தீயணைப்பு மீட்புத் துறையும் காயம் பட்டவர்களுக்கு உதவின.

6 பயணிகளுக்கும் 6 விமானச் சிப்பந்திகளுக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விமானம் துருக்கியேவுக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது சுமார் 20 விநாடிகளுக்கு ஆட்டங்கண்டது. விமானத்தில் உணவு அளிக்கப்பட்ட நேரத்தில் சம்பவம் நிகழ்ந்தது. (நன்றி – https://seithi.mediacorp.sg/

Leave a Reply