கத்தார் சாலைகளில் வலது பக்கமாக வாகனங்களை முந்தும் சாரதிகளை கண்காணிக்க புதிய நடைமுறை!

கத்தார் சாலைகளில் வலது பக்கமாக வாகனங்களை முந்தும் சாரதிகளை கண்காணிக்க புதிய நடைமுறை கத்தார் போக்குவரத்து துறை ஆரம்பித்துள்ளது. இது சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், விதிமீறல்களைக் கண்டறிவதற்கும் உதவும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது,

வலதுபுறத்தில் இருந்து முந்திச் செல்லும் சில வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற நடத்தை தொடர்பான வீடியோவொன்றை உள்துறை அமைச்சு பகிர்ந்து இது தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளது.

“வலதுபுறத்தில் இருந்து முந்திச் செல்வது பொறுப்பற்ற நடத்தையாகும், பெரும்பாலும் மற்றவர்களின் உரிமைகளைப் புறக்கணிப்பது மற்றும் பல போக்குவரத்து விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாகும்” என உள்துறை அமைச்சு தனது சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த, வலதுபுறம் முந்திச் செல்லும் மீறல்களைக் கண்டறிய பல கண்காணிப்பு சாதனங்கள் ஆங்காங்கு நிறுவப்பட்டுள்ளன

2015ல் திருத்தப்பட்ட போக்குவரத்துச் சட்டத்தின்படி, வலதுபுறத்தில் இருந்து முந்திச் செல்வதற்கான அபராதம் QR1,000. என்பதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply