கத்தாரிலிருந்து பெருநாளைக்கு தாயகம் திரும்ப இருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

Qatar announced Eid holiday for 2024

எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு தாயகம் திரும்ப, அல்லது கத்தாருக்கு பயணிக்க இருப்போருக்கு கத்தார் ஹமத் விமான நிலையம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பயணிகள் அனைவரும் தங்களை ஆன்லைனில் செக்-இன் ( Check-In Online) செய்து கொள்ளும் படியும், விமானம் பயணிக்க குறைந்து 3 மணித்தியாலங்களுக்கு முன்னர்  விமான நிலையத்தை வந்தடையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் பயணிகள் தங்களை சுயமாக செக்-இன் செய்தவதற்கான வசதிகள் காணப்படுகின்றன. அங்கு பயணிகள் தங்களது போர்டிங் பாஸ்களை பிரின்ட் செய்து கொள்வதோடு தங்களது பயணப் பொதிகளுக்குத் தேவையான டெக்களையும் பெற்றுக்கொள்ள முடிவதோடு, பயணப் பொதிகளை கவுன்டரில் உட்செலுத்திக் கொள்ளவும் முடியும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் பயணம் செய்யும் வரை குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் குடியேற்ற செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு மின்-வாயில்களைப் (E-gates) பயன்படுத்தலாம்.  குறிப்பிட்ட பயணியின் புறப்படும் நேரத்திற்கு அறுபது நிமிடங்களுக்கு முன்பு செக்-இன் முடிவடைகிறது என்பதை பயணிகள் ஞாபகத்தின் வைத்தியருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,

பொதிகளுடன் தாயகம் செல்பவர்கள் தங்களது, பயணப்பொதியின் எடை தொடர்பாக அக்கரை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  விமான சேவைகளுக்கு விமானச் சேவை பெக்கேஜ் எடை அளவு வித்தியாசப்படுகின்றது. எனவே அதிகளவு பொருட்களுடன் விமான நிலையத்திற்கு வருகை தருவதை தவிர்ப்பது நல்லது என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணத்திற்காக விமானத்தில் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் வருமாறு,

  • திரவங்கள்
  • ஏரோசோல்கள் (Sprays)
  • ஜெல் வகைகள்
  • லித்தியம் பேட்டரிகள்

விடுமுறைக்காக தாயகம் செல்பவர்கள், செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்வதைக் குறைக்கவும் பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DOH இலிருந்து புறப்படும் பயணிகள், ‘HIAQatar’ மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து, விமானத்தின் நிலை, சாமான்கள் உரிமைகோரல் மற்றும் போர்டிங் கேட்களுக்கான திசை, அத்துடன் உணவு, பானங்கள் மற்றும் சில்லறை விற்பனை பற்றிய நிகழ்நேரத் தகவல்களுடன் பயணிகளின் பயணத்தை மேலும் தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும்.

பயணிகள் தயவு செய்து முனையத்தில் உள்ள பலகைகளைப் பின்பற்றவும் அல்லது பயணச் செயல்முறையை மிகவும் வசதியாகச் செய்ய ஊழியர்களிடம் உதவி கேட்கவும். ஹமாத் சர்வதேச விமான நிலையம் தடையற்ற ஈத் பயண காலத்தை உறுதி செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது பயணிகள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் மறக்கமுடியாத தருணங்களை உருவாக்கும் என்பதாக கத்தார் விமான நிலைய நிர்வாகம் நம்புகின்றது,

மேலும் வாகனங்களில் விமான நிலைய வளாகத்திற்கு வருபவர்கள் குறுகிய நேர கார் பார்க் வசதியைப் படுன்படுத்தி நெரிசலைக்குறைக்கும் படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: கத்தாரில் பெருநாள் காசு வழங்கும் நடைமுறையை ஊக்குவிக்க புதிய பணமெடுங்கும் இயந்திரங்கள்!

Leave a Reply