கத்தாரில் நோன்புப் பொருநாள் ஏப்ரல் 10ம் திகதி கொண்டாடப்படும் – Qatar Calendar House தெரிவிப்பு!

Qatar Calendar House

வல்லுநர்களால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான வானியல் கணக்கீடுகளின்படி, ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் மற்றும் இந்த ஆண்டு நோன்புப் பெருநாளின் முதல் தினம் ஏப்ரல் 10 புதன்கிழமை அன்று இருக்கும் என்று கத்தார் காலண்டர் ஹவுஸ் தெரிவித்துள்ளது.

வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில், ஷவ்வால் மாதத்தின் பிறையைப் பார்ப்பது கத்தார் மாநிலத்திலோ அல்லது இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளிலோ பார்வை நாளின் மாலையில் சாத்தியமற்றது, ஏனெனில் இந்த நாளில் சூரியன் மறையும் போது பிறை பிறக்காது என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈத் அல்-பித்ர் தொழுகைக்கான நேரம் தோஹா உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 10 புதன்கிழமை காலை 5:32 மணிக்கு இருக்கும் என்று கத்தார் காலண்டர் ஹவுஸ் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும், இஸ்லாமிய ஷரியாவின் அடிப்படையில் பிறை பார்ப்பதை உறுதிசெய்வது தொடர்பான உத்தியோக  பூர்வ முடிவுகள், கத்தார் பிறை கமிட்டி மற்றும் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு போன்றவற்றால் எடுக்கப்படும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உறவுகள் அனைவருக்கும் எமது முற்கூட்டிய நோன்புப் பொருநாள் வாழ்த்துக்கள் ( HAPPY EID MUBARAK)

Also Read: கத்தாரில் பெருநாள் காசு வழங்கும் நடைமுறையை ஊக்குவிக்க புதிய பணமெடுங்கும் இயந்திரங்கள்!

Leave a Reply