ஆறு வருடங்களின் பின்னர் கத்தார் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கிடையிலான விமானச் சேவைகள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஜுன் மாதம் 5ம் திகதி கத்தார் மற்றும் சவுதி அரேபியா கூட்டணி நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட ராஜதந்திர முறிவு காரணமாக ஐந்து நாடுகளுக்கிடையிலான விமானச் சேவைகள் துண்டிக்கப்பட்டன. சவுதிக் கூட்டணி நாடுகளில் ஒன்று பஹ்ரைன் ஆகும்.
கத்தார் – சவுதி அரேபிய நாடுகளுக்கிடையில் இராஜ தந்திர உறவுகள் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் மீள ஆரம்பிக்கப்பட்டதாலும், பஹ்ரைன் – கத்தார் இடையே இணக்கம் ஏற்படவில்லை.
இதன் காரணமாக மேற்படி கத்தார் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கிடையிலான விமானச் சேவைகள் தொடர்ந்தும் துண்டிக்கப்பட்டே இருந்தன.
கடந்த 2023ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 12ம் திகதி நடைபெற்ற வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு (Gulf Cooperation Council (GCC)) ஒன்றுகூடலில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து கத்தார் – பஹ்ரைன் நாடுகளுக்கிடையில் மீள இராஜ தந்திர உறவுககள் மீள ஆரம்பிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் பஹ்ரைனின் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை கடந்த திங்களன்று இந்த மே மாதம் 25ம் திகதி முதல் விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கும் என்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read: விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள கத்தாரின் வைரல் புகைப்படம்!