Qatar FIFA 2022

உலக கோப்பை கால்பந்து திருவிழாவுக்கு தயாரானது கத்தார் (VIDEO)

22வது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இந்த மாதம் 20 ம் தேதி துவங்குகிறது.

கத்தார் தலைநகர் தோகா-வைச் சுற்றி எட்டு கால்பந்து மைதானங்கள் இதற்காக தயார் நிலையில் உள்ளது.

புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டேடியங்கள் நட்சத்திர விடுதிகளை மிஞ்சும் அளவுக்கு உள்ளது.

32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடர் மொத்தம் 29 நாட்கள் நடைபெறுகிறது.

8 குரூப்பில் தலா நான்கு அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் மொத்தம் 48 லீக் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடம் பெரும் அணிகள் நாக்-அவுட் போட்டிகளுக்கு தகுதி பெரும்.

மொத்தம் 64 போட்டிகளை கொண்ட இந்த போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் டிசம்பர் மாதம் 18 ம் தேதி நடைபெறுகிறது.

முதல்முறையாக அரபு நாடுகளில் போட்டி நடைபெற இருப்பதை அடுத்து உலகம் முழுக்க இருந்து கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டில் குவியத் தொடங்கி இருக்கின்றனர்.

தவிர, சொகுசு கப்பலிலும் தங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் துவங்கியுள்ளது.

தோகா முழுவதும்  மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது இதுகுறித்த வீடியோ காட்சிகள் மேலே இணைக்கப்பட்டுள்ளது. மேலும் கத்தாரில் முக்கிய இடங்களிலும் விதவிதமான சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button
%d