கத்தார் உலகக் கோப்பை ரசிகர்களுக்கான தங்குமிடமாக மிதக்கும் சொகுசுக் கப்பல்! (வீடியோ)

floating hotel arrives in Doha for Football Fans

உலக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ள கத்தார் நாட்டுக்கு, மிதக்கும் ஹோட்டலான சொகுசு கப்பல் கடந்த இரு தினங்களுககு முன்னர்  வந்தடைந்தது.

உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல்களில் ஒன்றான MSC Europa கப்பலில் 22 தளங்கள் உள்ளன. கத்தார் வருகை தரும் கால்ப்பந்து ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த மிதக்கும் ஹோட்டல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

6,700-க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் வசதி கொண்ட இந்த சொகுசு கப்பலில், ஒருநாள் இரவு தங்க, நபர் ஒருவருக்கு 347 அமெரிக்க டாலர்கள் அறவிடப்படவுள்ளது.

இந்த சொகுசுக் கப்பலில் 33 உணவகங்களும், 4 தியெட்டவர் வசதிகளும் உள்ளன. அத்துடன் 7 நீச்சல் தடாகங்களும் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

Also Visit: உலக கோப்பை கால்பந்து திருவிழாவுக்கு தயாரானது கத்தார் (VIDEO)

Leave a Reply