கத்தார் பீபா டிக்கட்டுக்களை அதிகம் கொள்வனவு செய்த நாடுகள் இவைதான்!

கத்தாரில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் ஆரம்பிக்க இன்னும் 30 நாட்கள் வரை எஞ்சியுள்ள நிலையில், இதுவரை எந்த நாடு அதிக கால்ப்பந்து டிக்கட்டுக்களை கொள்வனவு செய்துள்ளது என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கத்தார் பீபா போட்டிகளுக்கு பொறுப்பாகவுள்ள உயர் அதிகாரியான Colin Smith அவர்கள் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போது, இது வரையில் 3 மில்லியன் டிக்கட்டுக்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதில் 37 விழுக்காடு டிக்கட்டுக்கள் கத்தார் பிரஜைகளாக கொள்வனது செய்துள்ளனர். இதன்படி டிக்கட்டுக்களை அதிகம் கொள்வனவு செய்த நாடுகள் பட்டியலில் கத்தார் முன்னிலை வகிக்கின்றது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாம் இடத்தில் சவுதி அரேபியாவும் உள்ளது.

நான்காவது இடத்தில் இங்கிலாந்தும், ஐந்தாவது இடத்தில் மெக்சிகோவும், ஆராவது இடத்தல் அமீரகமும், அடுத்த நான்கு இடங்களில் ஆர்ஜென்டினா, பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளும் இடம்பெற்றுள்ள குறிப்பிடத்தக்கது.

Also Read: கத்தாரில் வாகன ஓட்டுநர்களாக பணிபுரிவோருக்கான முக்கிய அறிவித்தல்!

Leave a Reply