கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தில் 3.4 கிலோ தங்கம் கடத்தி வந்த பயணிகள்

கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு கத்தார் நாட்டின் தோஹாவில் வரும் விமானத்தில் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து விமான நிலைய ஊழியர்களுடன் இணைந்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து நேற்று கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த 2 பயணிகளுடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையில் அந்த 2 பயணிகளும் தங்கள் உடலில் மறைத்து மொத்தம் 3.4 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

3.4 கிலோ தங்கத்தை பட்டை வடிவில் அமைத்து அதை 2 பயணிகளும் தங்கள் உடலில் கட்டிக்கொண்டு வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் 2 பயணிகளையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பயணிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 3.4 கிலோ தங்கத்தின் மதிப்பு சுமார் 1 கோடியே 70 லட்ச ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, தங்கத்தை கடத்தி வந்த 2 பயணிகளும் கசரக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அதிகாரிகள் பயணிகளின் பெயர்களை வெளியிடவில்லை.

Also Read: கத்தார் பீபா டிக்கட்டுக்களை அதிகம் கொள்வனவு செய்த நாடுகள் இவைதான்!

Leave a Reply