விசிட் விசாக்களை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துகிறது கத்தார்!

Qatar to stop visit visa during FIFA Word Cup 2022

நவம்பர் 1, 2022 முதல் கால்ப்பந்து உலகக் கோப்பையின் போது ஹய்யா கார்டு வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் அனைத்து பார்வையாளர்களும் விமானம், தரை மற்றும் கடல் எல்லைகள் வழியாக கத்தார் மாநிலத்திற்குள் நுழைவதை நிறுத்த உள்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த நடைமுறையானது டிசம்பர் 22ம் திகதி வரை நீடிக்கும் என்பதோடு விசிட் விசா வழங்கும் நடைமுறை டிசம்பர் மாதம் 23ம் திகதி முதல் வழமைக்குத் திரும்பும் என்பதாக உள்துறை அமைச்சு அறிவிப்பு விடுத்துள்ளது.

நவம்பர் 20, 2022 அன்று ஆரம்பிக்க உள்ள FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 இன் போது கத்தாருக்குள் நுழைவதையும் வெளியேறுவதையும் ஒழுங்குபடுத்துவது தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் இது இன்று(21.09.2022) அறிவிக்கப்பட்டது.

ஹய்யா அட்டைதாரர்களுக்கு மட்டுமே கத்தாருக்குள் நுழைய அனுமதிக்கப்படும் என்றும், அவர்கள் ஜனவரி 23, 2023 வரை நாட்டில் தங்குவதற்கு அனுமதிக்கும் என்றும் உள்துறை அமைச்சு மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: உலகின் 2வது பெரிய பணக்காரர் ஆனார் இந்தியாவின் கவுதம் அதானி!

Leave a Reply