Qatar Tamil News

கத்தாரில் ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டன

2022ம் ஆண்டுக்கான ஈதுல் அழ்ஹா ( ஹஜ்ஜுப் பெருநாள்) விடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்பை கத்தார் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அதன் படி அமைச்சகங்கள், அரச, மற்றும் பொது நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிர்வரும் ஜுலை 10ம் திகதி முதல் 14ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் எதிர்வரும் ஜுலை மாதம் 17ம் திகதி முதல் பணிக்கு திரும்புவார்கள்.

கத்தார் மத்தி வங்கியின் கீழ் இயங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றுக்கான விடுமுறைகளை மத்திய வங்கியே தீர்மானிக்கும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை 3 நாட்கள் வழங்கப்படுவது வழமையாகும். அந்த விடுமுறை நாட்களை நிறுவனங்களே வரையறை செய்யும்.

அனைவருக்கும் முற்கூட்டிய இனிய  ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

Also Read: கத்தாரில் ஜுலை 9ம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படும் – உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியானது!

Related Articles

Leave a Reply

Back to top button
%d