இலங்கைக்கு எரிபொருள் தந்து உதவுங்கள், கத்தாரிடம் இலங்கை கோரிக்கை!

Sri Lanka Minister of Energy Meets Qatar Minister

கத்தாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அந்நாட்டின் எரிசக்தி விவகார இராஜாங்க அமைச்சர் Excellency Mr. Saad Sherida Al-Kaabi அவர்களை நேற்று(28.06.2022) கலந்துரையாடியதாக கத்தார் எனர்சி தெரிவித்துள்ளது

நேற்றைய சந்திப்பில் கத்தார் மற்றும் இலங்கைக்கு இடையிலான எரிபொருள் உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கள்  தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக கத்தார் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான உதவிகளை பெறும் நோக்கில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கத்தாருக்கு உத்தியோக பூர் விஜயத்தை மேற்கொண்டு பயணமாகியமை குறிப்பிடத்தக்கது.

Also Read: எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தில்! இன்று நள்ளிரவு முதல் பகுதியளவில் முடங்குகிறது இலங்கை

Leave a Reply