Qatar MOI warns against copying World Cup logo on vehicle number plates
கத்தாரில் வாகனம் வைத்திருப்போருக்கு உள்துறை அமைச்சு முக்கிய எச்சரிக்கை செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கத்தாரில் நடக்க விருக்கும் கால்ப்பந்து உலகக் கிண்ணத்திற்கான லோகோ அடங்கிய வாகன இலக்கத்தகடுகள் ஏலத்தில் விடப்பட்டுள்ள விசேட பதிப்பாகும். எனவே அவற்றை குறித்த வாகனத்தை தவிர ஏனைய வாகனங்களில் நகல் எடுக்கவோ அல்லது நிறுவவோ முடியாது என்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மீறி நகலெடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதாக அமைச்சு எச்சரித்துள்ளது.
FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 லோகோவின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த அறிவிப்பில், உலகக் கோப்பை லோகோவுடன் கூடிய சிறப்பு நம்பர் பிளேட்டுகள் சர்வதேச கால்பந்து சம்மேளனத்துடன் ஒருங்கிணைந்து குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஏலம் விடப்பட்டுள்ளது. மேற்படி புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் ஏலம் விடப்பட்ட சிறப்பு எண் பலகைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், “வாகனங்களின் உரிமத் தகடுகளில் உலகக் கோப்பை லோகோவை நகலெடுத்து நிறுவுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை மீறும் எவரும் சட்டப்பூர்வ பொறுப்புக்கு ஆளாக நேரிடும், மேலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும் என்பதாக உள்துறை அமைச்சு பொது மக்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளைத் தடை நவம்பர் 15 முதல் செய்கிறது கத்தார்!