கத்தாரில் ஹஜ்ஜுப்பெருநாள் ஜுலை 9ம் திகதி கொண்டாடப்படும் – Qatar Calendar House அறிவிப்பு!

2022 Eid Al Adha on July 9 Qatar

கத்தாரில் ஹஜ்ஜுப்பெருநாள் ஜுலை 9ம் திகதி கொண்டாடப்படும் என்பதாக Qatar Calendar House அறிவித்துள்ளது. வானியஸ் சாஸ்திரவியலின் அடிப்படையில் துல் ஹஜ் மாதத்தின் முதல் தினம் ஜுன் 30ம் திகதி என்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2022ம் ஆண்டுக்கான ஹஜ் பெருநாள் ஜுலை 9ம் திகதி கொண்டாடப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எ்ன்றாலும் 2022 ஆண்டிற்கான து அல்-ஹிஜ்ஜாவின் ஆரம்பம் பற்றிய அதிகாரப்பூர்வ முடிவு கத்தாரில் உள்ள அறக்கட்டளை அமைச்சகத்தின் (அவ்காஃப்) பிறை பார்வைக் குழுவினால் அறிவிக்கப்படும்.

மேலும் துல் ஹஜ் மாதத்திற்கான பிறை  ஜூன் 29, 2022 புதன்கிழமை காலை, தோஹா உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:53 மணிக்கு (GMT அதிகாலை 2:53 மணிக்கு) பிறக்கும் என கத்தார் பிறைக்குழு உயர் அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: கத்தாரில் வாகனம் வைத்திருப்போருக்கு உள்துறை அமைச்சு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Leave a Reply