Qatar Tamil News

கத்தார் – அல் வக்ரா கடற்கரையில் செத்து கரையொதுங்கிய மீன்கள்!

கத்தார் – அல் வக்ரா கடற்கரையில் மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வக்ரா கடற்கரைக்கு சென்ற பிரஜையொருவர் மீன்கள் கரையொதுங்கியுள்ளதைக் கண்டு சுற்றுச்சூழல் அமைச்சிற்கு புகாரளித்துள்ளார்.

மேற்படி புகாரைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் கண்காணிப்பு துறை மற்றும் கடல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய கடற்கரைக்கு விரைந்து செத்த மீன்களையும், அந்த கடற்பகுதியில் உள்ள நீரையும் பெற்று மேலதிக பரிசோதனைகளுக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பியுள்ளனர்.

மீன்கள் இறப்பதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறியவும், ஆய்வின் முடிவுகளை பொதுமக்களுக்கு வழங்கவும் பிரச்சினையை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மீன்கள் இறக்கும் சம்பவம் உலகளவில் மற்றும் கத்தாரில் ஏற்படுகிறது, குறிப்பாக கோடை காலத்தில், இது அதிக வெப்பநிலை மற்றும் தண்ணீரில்  ஆக்ஸிஜனின் அளவு குறைவடைதால் காரணமாக இது ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Also Read: 2022ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலையங்கள்! கத்தார் HIA முதல் இடம்பெற்று அசத்தல்!

Fish death incident in Al Wakrah of Qatar 2

Related Articles

Leave a Reply

Back to top button
%d