Fish Prices go up in Qatar
கத்தார் சந்தையில் மீன்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கத்தாரின் மீன் சந்தையான உம் அல் ஸலால் மத்திய சந்தைகளில் காட்சிப்படுத்தப்படும் மீன்களின் எண்ணிக்கை குறை வடைந்துள்ளதாக சந்தை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது கத்தாரில் காலைநிலை மாற்றம், தூசிக்காற்று, போன்றவற்றின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வது குறைவடைந்துள்ளது. எனவே சந்தைகளில் காட்சிப்படுத்தப்படும் மீன்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கத்தார் நாளிதழான அல் ராயாஹ்வின் செய்திப்படி நாள் ஒன்றுக்கு 23 டன் மீன்கள் மாத்திரமே விற்பனைக்கு வருவதாக தெரிவித்துள்ளது. ஏனைய காலங்களில் ஒரு நாளைக்கு 50-60 டன் மீன்கள் சந்தைப்படுத்தப்படுவதாகவும் நாளிதழ் தெரிவித்துள்ளது.
எனவே விற்பனைக்கு வரும் மீன்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையினால் கேள்வி அதிகரித்து அனைத்து வகையான மீன்களின் விலைகளும் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக மேற்படி நாளிதழ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பீபா கால்ப்பந்து போட்டிகளின் போது நாள் ஒன்று 2 இலட்சம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள்!
Fish Prices go up in Qatar