பீபா கால்ப்பந்து போட்டிகளின் போது நாள் ஒன்று 2 இலட்சம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள்!

two hundred thousand foot ball fans per day

two hundred thousand foot ball fans per day

கத்தார் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின்போது நாளொன்றுக்கு 200,000 விமானப் பயணிகளை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், வளைகுடா நாடுகள் காற்பந்து ரசிகர்களை கத்தார் கொண்டு சேர்க்க பல விமானச் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அது 4 வாரங்கள் நடைபெறும்.

பங்கேற்காத நாடுகள் சிலவற்றுக்கான விமானச் சேவைகளைக் குறைக்கவோ, தற்காலிகமாக நிறுத்தவோ கத்தார் திட்டமிடுகிறது.

டோஹா அனைத்துலக விமான நிலையமும், ஹமாத் அனைத்துலக விமான நிலையமும் நாளொன்றுக்கு 200,000 பயணிகளைக் கையாளும் என்று கத்தாரின் சுற்றுலாத் துறை அமைச்சர் கூறினயுள்ளார்.

கத்தார் செல்வோர் தங்குவதற்குப் போதுமான ஹோட்டல் அறைகள் இருக்காது என்பதால், Saudia, Kuwait Airways, flyDubai, Oman Air ஆகியவை ஒவ்வொரு நாளும் கத்தார் சென்று திரும்பும் 160 விமானச் சேவைகளை வழங்கவிருக்கின்றன.

அவை ரசிகர்களை ஒரு நாளுக்கு மட்டும் கத்தார் அழைத்துச் சென்று, போட்டிக்குப் பின் திரும்ப அழைத்துக் கொண்டுவரும் சேவையை வழங்கும். அண்டை நாடுகள், நகரங்களிலிருந்து அத்தகைய 20,000க்கும் அதிகமானோர் அன்றாடம் கத்தார் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (தமிழ் செய்திகள்)

two hundred thousand foot ball fans per day

இதையும் படிங்க: கத்தாரில் கடும் உஷணம்! காலை 10.00 – 3.30 மணி வரை பொது வெளியில் பணியமர்த்த தடை!

எமது பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முகநூல் பக்கத்தை  LIKE செய்து கொள்ளுங்கள் கத்தார் தமிழ்

Leave a Reply