கத்தாரிலுள்ள முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளைக்கான பிறை பார்க்கும் படி Awqaf கோரிக்கை!

Ramazan Eid Festival 2022

கத்தாரிலுள்ள முஸ்லிம்கள் எதிர்வரும் 30ம் திகதி ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் படி கேட்டுக்கொள்ளபட்டுள்ளனர். கத்தாரிலுள்ள இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு (அவ்காப்) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

கத்தாரிலுள்ள யாராவது பிறைகளைப் பார்த்தால் ஆதாங்களுடன் கத்தார் இஸ்லாமிய விவகார அமைச்சுக்கு அறிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அப்-தப்னா (Dafna) கோபுரத்தில் அமைந்துள்ள அமைச்சின் தலைமையகத்தில் கத்தார் பிறைக்குழு 30.04.2022 மஃரிப் தொழுகையுடன் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கத்தார் இஸ்லாமிய விவகார அமைச்சின் தொலைபேசி இலக்கம் – 
+974 4470 0000

Leave a Reply