கத்தார் – கொர்னிச் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களில் 10 ஆயிரத்திற்கு அதிகமானோர் பங்கேற்பார்கள்

Ramazan Eid Celebration 2022

Ramazan Eid Celebration 2022

கத்தார் – கொர்னிச் பகுதியில் நடைபெறவுள்ள நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களில் 10 – 15 ஆயிரம் பொது மக்கள் பங்கு பற்றுவார்கள் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் டுவரிஸ்ம் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களை, நோன்புப் பெருநாள் தினம், மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு தினங்களில் கத்தார் கொச்னிச் பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள செய்துள்ளது.

இங்கு பலூன் பவணிகள், கச்சோரிகள், மற்றும் கன்கவர் பயர்வெர்க்ஸ் நிகழ்வுகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முதலாம் கட்ட கொண்டாட்ட நிகழ்வுகள் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. இசைக் கச்சேரிகள் இரவு 7.30 – இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளதோடு, இரவு 9 மணிக்கு கன்கவர் பயர்வெர்க்ஸ் நிகழ்வுகள் ஆரம்பிக்கும் என்பதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

மேற்படி நிகழ்வுகள் அனைத்துக்குமான அனுமதி முற்றிலும் இலவசம் என்பதோ, இதைக் கண்டுகளிக்க நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் 15 ஆயிரத்திற்கும் இடையிலான மக்கள் ஒன்று கூடுவார்கள் என்பதாக கத்தார் டுவரிஸ்ம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் நோன்புப் பெருநாள் தொழுகை அதிகாலை 5.12க்கு நடைபெறும்!

Leave a Reply