ரமழான் பண்டிகையை வரை கத்தார் மெட்ரோவின் சேவை நேரங்கள் அதிகரிப்பு!

Qatar Metro increase the service timing until EID

Qatar Metro increase the service timing until EID

எதிர்வரும் நோன்புப் பொருநாள் (ரமழான் பண்டிகையை) வரை கத்தார் மெட்ரோவின் சேவை நேரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கத்தாரின் மெட்ரோ சேவை மற்றும் லுசைல் நகருக்கான டிரம் சேவைகளின் பணி நேரங்கள் நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கத்தார் ரயில் அறிவித்துள்ளது.

இந்த சேவை நேர அதிகரிப்பான எதிர்வரும் 17ம் திகதி(நாளை) முதல் நோன்புப் பொருநாள் தினம் வரை தொடரும்.

புதிய அறிவிப்பின் படி வார நாட்களில் காலை ஆறு மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை மெட்ரோ மற்றும் டிரம்  போன்றவை சேவையில் ஈடுபடும். வெள்ளிக்கிழமைகளில் நன்பகல் இரண்டு மணி முதல், நள்ளிரவு ஒரு மணி வரையாகும் என்பதாக கத்தார் ரயில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வயிற்றினுள் போதைப் பொருட்களை மறைத்து கத்தார் பயணித்தவர் சுங்க அதிகாரிகளால் கைது!

 

Leave a Reply