வயிற்றினுள் போதைப் பொருட்களை மறைத்து கத்தார் பயணித்தவர் சுங்க அதிகாரிகளால் கைது!

Qatar Customs caught traveller with drugs inside stomach

Qatar Customs caught traveller with drugs inside stomach

வயிற்றினும் போதைப் பொருட்களை மறைத்து கத்தார் பயணித்தவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரின் ஹமத் விமான நிலையத்தில் அமைந்துள்ள வருகை சுங்கப் பிரிவின் அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி பயணியின் செயற்பாடுகளில் சந்தேகம் கொண்டு சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விஷேட பரிசோதனையில், அவர் போதைப் பொருட்களை வயிற்றினுள் மறைத்து கத்தாருக்கு கடத்தி வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் தங்களது உத்தியோக பூர்வ டுவிட்டரில் செய்தியையும், தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய புகைப் படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளனர்.

கத்தாரின் விமான நிலையத்தில் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் பயணிகள், மற்றும் பயணப் பொதிகள் ஸ்கேன் செய்யப்படுவதாகவும், போதைப் பொருள் மற்றும் கத்தாரில் தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களுடன் சிக்குபவர்கள் உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாகவும், சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் சட்ட விரோதமாக தங்கியிருப்போருக்கான மன்னிப்பு காலம் ஏப்ரல் 30 வரை நீடிப்பு!

Qatar Customs caught traveller with drugs inside stomach

Leave a Reply