பீபா ரசிகர்களுக்காக ஒரு இலட்சத்து 30 ஆயிரம் அறைகள் தயார் நிலையில் – கத்தார் அறிவிப்பு

More than 130 thousand rooms ready for Qatar FIFA

More than 130 thousand rooms ready for Qatar FIFA

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பீபா உலகக் கிண்ண ரசிகர்களுக்காக ஒரு இலட்சத்து 30 ஆயிரம் அறைகள் தயார் நிலையில்  உள்ளதாக கத்தார் அறிவிப்பு செய்துள்ளது.

கத்தாரில் கால்ப்பந்து தயார்ப்படுத்துலக்கு பொறுப்பாக உள்ள The Supreme Committee for Delivery and Legacy (SC)  இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவ்வாண்டு இறுதியில் நடைபெற்றவுள்ள உலகக் கிண்ண ரசிகர்களுக்கான ஒரு இலட்சத்து 30 ஆயிரம் விட அதிகமான தங்குமிட வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக அது தெரிவித்துள்ளது. இந்த தங்குமிடங்களில் ஹோட்டல்கள், மிதக்கும் ஹோட்டல்கள், வில்லாக்கள், தொடர்மாடிக்கட்டிடங்கள் மற்றும் ரசிகர் கிராமங்கள் போன்றவை உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரின் பீபா கிண்ணப் போட்டிகளுக்கான டிக்கட்டுக்களை கொள்வனவு செய்தவர்கள், தங்குமிடங்களை புக்கிங் செய்து கொள்ள முடியும். தங்குதமிடங்களின் விலைகள் நாள் ஒன்றுக்கு 80 அமெரிக்க டாலர்களுக்கும் 180 டாலர்களுக்கும் இடையில் காணப்படும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் பீபா போட்டி நிகழ்ச்சிகளுக்கான டிக்கட் கொள்வனது மற்றும் தங்குமிட வசதிகளை புக்கிங் செய்யும் போது உத்தியோக பூர்வ இணை தளத்தின் ஊடாக மாத்திரம் மேற்கொள்ளும் படி பீபா போட்டி நிகழ்ச்சிகளுக்கான பொறுப்பாளர் Nasser Al Khater அவர்கள் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளமை கறிப்பிடத்தக்கது.

  • டிக்கட் புக்கிங் செய்ய : CLICK HERE
  • தங்குமிடங்களை புக்கிங் செய்ய: CLICK HERE

இதையும் படிங்க: கத்தார் கால்ப்பந்துப் போட்டி விதிகளில் எந்த திருத்தமும் இல்லை – FIFA அறிவிப்பு!

More than 130 thousand rooms ready for Qatar FIFA

Leave a Reply