கத்தார் கால்ப்பந்துப் போட்டி விதிகளில் எந்த திருத்தமும் இல்லை – FIFA அறிவிப்பு!

No Rules Change in Qatar Football - Fifa

No Rules Change in Qatar Football – FIFA

இந்த ஆண்டு அதாவது 2022ம் வருடத்தில் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. மொத்தம் 32 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாட உள்ளன.

இந்நிலையில் போட்டியின் நேரம் அதிகரிக்கப்படுவது தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஃபீபா விளக்கத்தை அளித்துள்ளது.

FIFA உலகக் கோப்பை கத்தார் 2022க்கான கால்பந்து போட்டிகளின் நேரத்தை நீட்டிக்கவிருப்பதாகவும், எனவே அது தொடர்பான விதிகளை மாற்றுவது குறித்து பரிசீலித்து வரும் செய்திகளை FIFA மறுத்துள்ளது.

திட்டமிட்ட கால்ப்பந்து போட்டிகள் நவம்பர் மாதம் 21ம் திகதி ஆரம்பித்து, கத்தாரின் தேசிய தினமான டிசம்பர் 18ம் திகதி வரை நடைபெறும் என்பதாக பீபா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நான்காவது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது கத்தார் சுகாதார அமைச்சு!

Leave a Reply