கத்தாரில் ஆன்லைன் டெரிவரி சேவைகளுக்கான கட்டணங்களை வரையரை செய்தது அரசாங்கம்!

கத்தாரில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் டெரிவரி சேவைக்காக அறவிடும் கட்டணங்களை அரசாங்கம் வரை செய்துள்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான சேவைக்கட்டமாக, மேட்டார் பைக் மூலமாக இருந்தால் 10 ரியால்களும், ஏனைய வாகனங்கள் மூலமாக இருந்தால் 20 ரியால்களும் அதிகபட்சமாக அறவிட்டுக்கொள்ள முடியும் என்பதாக கத்தார் வர்த்த அமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்படி விதிமுறைகளை கத்தாரிலுள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களும் முறையாகப் பின்பற்றும் படி அமைச்சியால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டின் 8ம் இலக்க  வாடிக்ககையாளர் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் அமைச்சு தெரிவத்துள்ளது.

வாடிக்கயைாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின் மீறும் நிறுவனங்கள் மீது ஒரு மில்லியனத் கத்தார் ரியால்கள் விதிக்கப்படுவதோடு மூன்று மாதங்கள் இழுத்து மூடப்படும் எனவும் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கத்தாரிலுள்ள அனைத்து உணவகங்கள், கஃபேக்கள், சிற்றுண்டிச்சாலைகள், கடைகள், முக்கிய விற்பனை நிலையங்கள் மற்றும் சப்ளையர்கள் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான கட்டணங்களை அறவிடும் டெலிவரி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடாது என்று அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு தொடர்பான மீறல்கள் குறித்து புகாரளிக்க, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அழைப்பு மையம் அல்லது சமூக ஊடக தளங்களைத் தொடர்பு கொள்ளும் படி வர்த்தமாக அமைச்சு பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா கொவிட் 19 காரணமாக அதிகளவான வியாபாரங்கள் ஆன்லைன் வர்த்தகத்துக்கு மாறியுள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் நலன் கருதி ஆன்லைன் டெரிவரி சேவைகளுக்கான கட்டணங்களை வரையரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply