சோனி உலக புகைப்பட விருது 2021! கத்தார் வாழ் இலங்கையர் விருது பெற்று அசத்தல்! Amal Prasad

Amal Prasad Sony World Photography Awards 2021

சோனி வேர்ல்ட் போட்டோகிராபி விருதுகள் 2021யில் கத்தாரின் தேசிய விருது பெற்றவராக கத்தார் வாழ் இலங்கையொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய விருதுகள் திட்டம் என்பது உலக புகைப்பட அமைப்பு மற்றும் சோனி இணைந்து உலகெங்கிலும் உள்ள உள்ளூர் புகைப்பட சமூகங்களை ஆதரிக்கும் ஒரு முயற்சியாகும். 2021ம் ஆண்டுக்கான போட்டியில் 61 நாடுகள் பங்கு பற்றியிருந்தன.

உலகின் 211 பகுதிகளிலிருந்து Sony World Photography Awards 2021க்கு  3 இலட்சத்து 40 ஆயிரம் படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் 1 இலட்சத்து 70 ஆயிரம் புகைப்படங்கள் திறந்த போட்டிக்குள் நுழைந்தன. அதிலிருந்து தேசிய விருதுகளை பெற்ற பெற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கத்தாரில் பணிபுரியும் புலம்பெயர்ந்த இலங்கையரான அமல் பிரசாத் (Amal Prasad) , கத்தாரின் தேசிய விருது வென்றவராக திறந்த போட்டியின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  வாழ்க்கை முறை பிரிவில் நுழைந்த அவரது “வாழ்க்கைப் போராட்டம் -Struggle of Life” என்ற புகைப்படத்திற்காகவே Amal Prasad தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் புகைப் படம் தொடர்பாக Amal Prasad கருத்து தெரிவிக்கும் போது, ”இது இலங்கையில் மீன் பிடிக்கப்படும் தனித்துவமான முறையாகும். அதனை நான் கலை வடிவில் உலகிற்கு காட்ட விரும்பினேன்” என்றார்.

மேலும், கொழும்பிலிருந்து அம்மாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலைப் பிரதேசத்திற்கு பயணித்து இரண்டு, மூன்று தினங்கள் முயற்சி செய்து ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி இந்த புகைப்படத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் ஆன்லைன் டெரிவரி சேவைகளுக்கான கட்டணங்களை வரையரை செய்தது அரசாங்கம்!

Leave a Reply