கத்தார் பீபா 2022 கால்ப்பந்து உலகக் கிண்ணத்திற்கான டிக்கட் விற்பனை ஆரம்பம்!

Qatar FIFA Foot Ball Tickers Sales started

கத்தார் பீபா 2022 கால்ப்பந்து உலகக் கிண்ணத்திற்கான டிக்கட் விற்பனை ஆரம்ப ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்ப்பந்து டிக்கட் விண்ணப்பத்திற்கான முதற்பட்ட பணிகள் இன்று (19.01.2022) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் எதிர்வரும் பெப்ரவரி 8ம் திகதி வரை டிக்கட்களுக்கான விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க முடியும் என்பதாக நிருவாகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்ப படிவங்களை ஜனவரி 19ம் திகதி ஆரம்ப தினத்தில் சமர்ப்பித்தல், மற்றும் நிறைவு தினமான பெப்ரவரி 8ம் திகதி சமர்ப்பித்தல் ஆகியவற்றுக்கிடையில் எந்த விதமான வேறுபாடுகளோ, முன்னரிமைகளோ கிடையாது. கால்ப்பந்துப் பிரியர்கள் தங்களது டிக்கட்டுக்களுக்கான விண்ணப்பங்களை மேற்படி திகதிகளுக்கிடையில் சமர்ப்பிக்க முடியும்.

சமர்ப்பிக்கப்படும் டிக்கட்டுக்களுக்கான விண்ணப்பங்களில், ஏற்றுக்கொள்ளப்பட்டவை, மற்றும் நிராகரிக்கப்பட்டவை தொடர்பான விபரங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 8ம் திகதி முதல் அறிவிக்கப்படும் என்பதோடு ஏற்றுக்கொள்ளப்பட்ட டிக்கட்டுக்களுக்கான கட்டணங்களை செலுத்தும் வழிமுறைகளும் குறித்த தினத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

கால்ப்பந்து உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் 2022ம் ஆண்டு முதல் டிசம்பர் 18ம் திகதி முதல் கத்தாரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 8 மைதானங்களில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நடுவானில் பறந்து கொண்டிருந்த கத்தார் எர்வெய்ஸ் விமானத்தில் பிறந்த குழந்தை!

Leave a Reply