கத்தார் அறிமுகப்படுத்தவுள்ள தானியங்கி இலத்திரனியல் மினி-பஸ் வண்டிகள், சோதனையோட்டம் வெற்றி!

கத்தார் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள தானியங்கி இலத்திரணியல் மினி-பஸ் வண்டிகளின் சோதனையோட்டம் வெற்றியளித்துள்ளதாக கத்தார் கல்ப் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கத்தாரின் போக்குவரத்து அமைச்சர் HE Jassim Saif Ahmed Al-Sulaiti  அவர்களது முன்னிலையில் நேற்றைய தினம் (31.10.2021) 4ம் கட்ட சோதனையோட்டங்கள் நடத்தப்பட்டன.

கத்தாரின் பொதுப் போக்குவரத்து நிறுவனமான கர்வா (Mowasalat ) சீனாவின் வாகன உற்பத்தி நிறுவனமொன்றுடன் இணைந்து இந்த மினி-பஸ் வண்டிகளை உற்பத்தி செய்து அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த மினி-பஸ் வண்டிகள் எதிர்வரும் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணத்தின் போது பயணிகளின் போக்குரத்திற்கு பெரிதும் உதவும் என எதிர்பார்த்துள்ளதாகவும், இந்த ஆண்டு (2021) நவம்பர் இறுதியில் கத்தாரில் நடைபெற இருக்கும் பீபா அரபு கிண்ணம் 2021 (FIFA Arab Cup Qatar 2021) போது அறிமுகம் செய்யப்படும் என்பதாக Mowasalat  நிருவாகம் தெரிவித்துள்ளது.

ஓட்டுநர் இன்றி பயணிக்கும் வகையில் உயர் தொழில் நுட்பத்தினைக் கொண்டு இந்த மினி பஸ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. என்றாலும் அவசர நிலைமைகளைக் கருத்திற் கொண்டு வாகன ஓட்டுநர் ஒருவர் தேவைப்படுவார் என்பதாக கர்வா தெரிவித்துள்ளது.

மினி-பஸ் ஒன்றில் 8 பயணிகள் ஒரே நேரத்தில் உட்கார்ந்து பயணிக்க முடியும். அத்துடன் மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீட்டர்கள் தூரம் பயணிக்கும் ஆற்றல் மிக்கது. இந்த பஸ்ஸின் மின்கலம் ஒரு மணித்தியாலம் மற்றும் 30 நிமிடங்களில் முழுமையான சர்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, ஒரு முறை மின்கலம் முழுமைான சார்ஜ் செய்யப்பட்டால் 100 கிலோ மீற்றர் தூரம் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் வாகனம் செலுத்தும் போது கைப்பேசி பாவிப்பதை கண்காணிக்க புதிய நடைமுறை!

Leave a Reply