Qatar Tamil News
கத்தாரில் பெற்றோல், டீசல் விலைகள் இரண்டு ரியால்களைத் தாண்டின (November Fuel Price)

2021ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கான எரிபொருள் விலைகள் (November Fuel Price) இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாக கத்தார் பெற்றோலியம் (Qatar Energy (QE) அறிவித்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் 2.00 ரியால்களாக விற்கப்பட்டு வந்த பிரீமியம் பெற்றோல் அதே விலையிலும் மற்றும் 2.05 ரியால்களாக விற்கப்பட்டு வந்த சூபர் பெற்றோல் 5 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு 2.10 ரியால்களாகவும், விற்கப்படவுள்ள நிலையில், 1.95 ரியால்களாக விற்கப்பட்டு வந்த டீசல் விலை 10 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு 2.05 ரியால்களாக விற்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிவித்தலை கத்தார் எரிசக்தி அமைச்சு உத்தியோக பூர்வ இணையத்திலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.