கத்தாரில் பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெற இன்னும் சரியாக 1 வருடம் எஞ்சியுள்ளது!

கத்தாரில் பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெற இன்னும் சரியாக 1 வருடம் எஞ்சியுள்ள கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெற ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பார்க்கும் போது சரியாக இன்னும் 365 நாட்கள் எஞ்சியுள்ளது.

பீபா கால்ப்பந்து உலகக் கிண்ண வரலாற்றில் அரபு நாடொன்றில் நடைபெறும் முதலாவது கிண்ணம் இதுவாகும். இந்த போட்டி நிகழ்ச்சிகள் கத்தாரில் நடைபெறுவது முழு அரபு நாடுகளுக்கும் பெருமையாகும் என்பதாக கத்தார் அதிபர் அண்மையில் அறிவித்திருந்தார்.

உலகளவில் உள்ள கால்ப்பந்து ரசிகர்கள் அரபுலகின் கலாச்சாரம், மற்றும் மரபுகளை அறிந்து கொள்ளும் வகையில் மைதானங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் கத்தாரில் உயர் தர களிப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்பதாக பீபாவின் தலைவர் Gianni Infantino அவர்கள் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ணப் போட்டிகளுக்காக கத்தார் எட்டு மைதானங்களை உருவாக்கியுள்ளது. லுசைல் மைதானம் தவிர்ந்த ஏனைய 7 மைதானங்களும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் நடைபெறவுள்ள பீபா  உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்த எமது நாடு கடந்த 11 வருடங்களாக கடின உழைப்பை செலவிட்டு வருகிறது என்பதாக உலகக் கிண்ண ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாக உள்ள Supreme Committee for Delivery & Legacyயின் பொதுச் செயலாளர் H.E. Hassan Al Thawadi தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தார் 2022 பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணத்திற்கான 6வது மைதானம் இன்று அங்குரார்ப்பணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *