கத்தாரில் இன்று முதல் வெப்பநிலை சடுதியாக குறைவடையும் – MET தகவல்!

கத்தாரில் இன்று (24.11.2021) முதல் வெப்பநிலை சடுதியாக குறைவடையும் என்பதாக கத்தார் வளிமண்டலவியல் திணைக்கம்  (MET) தெரிவித்துள்ளது.

இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் கத்தாரில் வடமேற்கு காற்று வீச ஆரம்பிக்கவுள்ளது. எனவே வெப்ப நிலையானது சடுதியாக குறைவடைந்து குளிர் நிலைமைய அதிகரிக்கும்  என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாரம் முழுதும், மற்றும் வார இறுதியிலும் கத்தாரில் கடுமையான குளிர் நிலைமை காணப்படலாம் என்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில், வெப்பநிலையானது பகலில் 26-31க்கும் இடையிலும், இரவில் 14-23 பாகைக்கு இடையிலும் காணப்படும் என்பதாக கத்தார் வளிமண்டலவியல் திணைக்களம் டுவிட்டர் மூலமாக தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெற இன்னும் சரியாக 1 வருடம் எஞ்சியுள்ளது!

Leave a Reply