கத்தாரில் நடைபெறவுள்ள பீபா கால்ப்பந்து அரபுக் கிண்ணம் 2021 – ஒரு பார்வை!

FIFA Arab Cup 2021

கத்தாரில் நடைபெறவுள்ள பீபா கால்ப்பந்து அரபுக் கிண்ணம் 2021க்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ளன. கத்தாரை வந்தடைந்துள்ள 2021 FIFA Arab Cup மக்கள் பார்வைக்கான தற்போது கத்தார் முழுதும் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.

அரபுக் கிண்ணம் 2021 கத்தாரின் 4 நகரங்களில் உள்ள 2022ம் ஆண்டுக்கான முக்கிய மைதானங்களில் நவர்பர் 30ம் திகதி தொடக்கம் டிசம்பர் 18ம் திகதி வரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த அரபுக் கிண்ணம் 2021யில் அரபுலகைச் சேர்ந்த 16 நாடுகள் பங்குபற்றவுள்ளன.

 1. அல்ஜீரியா
 2. பயஹ்ரைன்
 3. எகிப்து
 4. ஈராக்
 5. ஜேர்தான்
 6. லெபனான்
 7. மருடேனியா
 8. மொரோக்கோ
 9. ஓமான்
 10. பாலஸ்தீனம்
 11. கத்தா்
 12. சவுதி அரேபியா
 13. சூடான்
 14. சிரியா
 15. தூனுசியா
 16. அமீரகம்
 • அல் ராய்யான் நகரில் அமைந்துள்ள, அஹமட் அலி விளையாட்டரங்கம்,
 • வக்ரா நகரில் அமைந்துள்ள அல் ஜனூப் விளையாட்டரங்கம்,
 • அல்கோர் நகரில் அமைந்துள்ள அல்பைத் விளையாட்டரங்கம்,
 • ராஸ் அல் அபூத் நகரில் அமைந்துள்ள Ras Abu Aboud விளையாட்டரங்கம்,
 • அல் துமானா நகரில் அமைந்துள்ள Al Thumama விளையாட்டரங்கம்,
 • அல் ராய்யான் அமைந்துள்ள Education City விளையாட்டரங்கம்
  போன்ற இடங்களில் நடைபெறவுள்ளன.

முதல் போட்டி எதிர்வரும் 30ம் திகதி, தூனுசியா மற்றும் மருடேனியா நாடுகளுக்கிடையில், அஹமட் அலி விளையாட்டரங்கம் நடைபெறவுள்ள நிலையில். இறுதிப் போட்டி அல்கோர் நகரில் அமைந்துள்ள அல்பைத் விளையாட்டரங்கம் எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதி ( கத்தார் தேசிய தினம்) நடைபெறவுள்ளது.

2022ம் ஆண்டு கத்தாரில் பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள நிலையில், மேற்படி நிகழ்வுகளுக்கு ஒத்திகையாக இந்த அரபுக் கிண்ணம் 2021 போட்டி நிகழ்ச்சிகள் அமையும் என்பதில் சந்தேகமில்லை. (FIFA Arab Cup 2021)

டிக்கட்டுக்களை புக்கிங் செய்ய – இங்கு செல்க

இதையும் படிங்க: கத்தாரில் இன்று முதல் வெப்பநிலை சடுதியாக குறைவடையும் – MET தகவல்!

Leave a Reply