கத்தாரில் சட்ட விரோதமாக தங்கியிருப்போருக்கான சலுகை காலம் இன்று முதல் ஆரம்பம்!

Qatar Airport

அறிவித்தல்

வெளிநாட்டவர்களுக்கும் வதிவிட அனுமதி உள்ளவர்களுக்குமான குடிவரவு, குடியகல்வுகளை ஒழுங்கு படுத்தும் 2015/21ம் இலக்க சட்ட விதிகளை மீறிய வெளிநாட்டவர்கள், அதனை நிவர்த்தி செய்து கொள்வதற்கான அறிவித்தல்

2015/21ம் இலக்க குடிவரவு, குடியகல்வு ஒழுங்குபடுத்தல் சட்ட விதிகளை மீறிய வெளிநாட்டவர்களுக்கு கத்தார் உள்துறை அமைச்சு அவர்களுடைய சட்ட ரீதியான அந்தஸ்த்தை நிவர்த்தி செய்து கொள்ள கால அவகாசத்தை இன்று முதல் (10-10.2021 தொடக்கம் 31.12.2021ம் திகதி வரை வழங்கியுள்ளது.

இதன் மூலம் இந்த சட்ட விதிகளை மீறிய வெளிநாட்டவர்கள் / தொழில் வழங்குனர்கள்/பணியகங்கள் தேடுதல்-பின் தொடர்தல் திணைக்களத்திற்கோ அல்லது உம் சலால் சேவை நிலையம், உம் சுனைம் நிலையம் (பழைய செனெய்யா), மிஸய்மீர் சேவை நிலையம், அல் வக்ரா சேவை நிலையம், அல் ராய்யான் சேவை நிலைங்களிற்கு பிற்பகல் 1 மணி முதல் 6 மணி வரை சமூகமளித்து, இச்சட்ட விதிகளின் அடிப்படையில் அபராத குறைப்பு அல்லது விதிவிலக்கு பெற உங்கள் வேண்டுகோள்களை சமர்ப்பிக்கலாம்.

இச்சட்ட அந்தஸ்தை சரிசெய்து கொள்ள தகுதியான நபர்கள் / பிரிவுகள்

  • குடியிருப்பு சட்டத்தை மீறிய வெளிநாட்டவர்கள்
  • வேலைவாய்ப்பு வீஸா சட்ட விதிகளை மீறியவர்கள்
  • குடும்ப வருகை வீஸா விதிகளை மீறியவர்கள்

சட்ட மீறல்களை மேற்கொண்ட பணியகங்கள் / வெளிநாட்டவர்கள் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தமது சட்ட அந்தஸ்த்தை சரி செய்து கொண்டு, சட்ட நடவடிக்கைகளில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு உள்துறை அமைச்சு உங்களை வேண்டிக் கொள்கிறது.

மேலும் இது தொடர்பான அறிவித்தலை உள்துறை அமைச்சு ஆங்கிலம், தமிழ், சிங்களம், பங்காளி, உர்து மற்றும் ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளிலும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply