கத்தாரின் அமைச்சரவையில் புதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கத்தார் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. கத்தார் அதிபர் தமீம் பின் ஹமத் அல்தானி அவர்களின் உத்தரவின் பெயரில் புதிதாக 13 அமைச்சர்கள் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கத்தார் அதிபரினால் (Amiri Order No. 4 of 2021) நியமனம் செய்யப்பட்ட அமைச்சர்கள் அனைரும் இன்று காலை கத்தார் அதிபரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் வைத்து அதிபர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட 13 அமைச்சர்களின் விபரங்கள் வருமாறு.
வருமாறு
1) நிதியமைச்சர் : HE Ali bin Ahmed Al Kuwari
2) போக்குவரத்து அமைச்சர் : HE Jassim bin Saif bin Ahmed Al Sulaiti
3) விளையாட்டு மற்றும் இளைஞசர் விவகார அமைச்சர் : HE Salah bin Ghanem Al Ali
4) நகராட்சி அமைச்சர் (பலதிய்யா) : HE Abdullah bin Abdulaziz bin Turki Al Subaie
5) இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் : HE Ghanem bin Shaheen bin Ghanem Al Ghanem
6) வர்த்துகத் துறை மற்றும் கைத்தொழில் அமைச்சர் : HE Sheikh Mohammed bin Hamad bin Qassim Al Abdullah Al-Thani
7) கல்வி மற்றும் உயர் கல்வியமைச்சர்: HE Buthaina bint Ali Al Jabr Al Nuaimi
8) கலாச்சார அமைச்சர் : HE Sheikh Abdulrahman bin Hamad bin Jassim bin Hamad Al-Thani
9) சுற்றுச் சூழல் விவகார அமைச்சர் : HE Sheikh Dr. Faleh bin Nasser bin Ahmed bin Ali Al-Thani
10) தொழிலாளர் விவகார அமைச்சர் : H E Dr. Ali bin Saeed bin Smaikh Al Marri
11) தொடர்பாடல், மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் : HE Mohammed bin Ali bin Mohammed Al Mannai
12) சமூக அபிவிருத்தி மற்றும் குடும்ப விவகார அமைச்சர் : HE Maryam bint Ali bin Nasser Al Misnad
13) அமைச்சரவை விவகார அமைச்சர் : HE Mohammed bin Abdullah bin Mohammed Al Yousef Al Sulaiti
இதையும் படிங்க : கத்தார் விமான நிலையத்தில் அத்தையை வழியனுப்ப பாதுகாப்பு அதிகாரியிடம் மழலை மொழியில் அனுமதி கேட்ட குழந்தை (VIDEO)