கத்தார் ஏர்வெய்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்! Face Shield கட்டாயமில்லை

Important notice from Qatar airways

கத்தார் ஏர்வெய்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதில் கத்தார் ஏர்வெய்ஸ் விமானச் சேவையில் பயணிப்பவர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக Face-Shieldகளை அணியத்தேவையில்லை என்பதாகவும், அதற்கு பதிலாக Face-Maskகளை அணிந்தால் போதுமானது என்பதாக தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் கத்தார் ஏர்வெய்ஸ் விமானச் சேவையில் பயணிக்க Face-Shield கட்டாயம் என்பதாக பரவும் செய்தி தொடர்பாக விளக்கம் அளிக்கும் போதே கத்தார் ஏர்வெய்ஸ் நிர்வாகம் இதனைத் தெரிவித்துள்ளது. சமூக வலைதளப் பதிவில் கத்தார் ஏர்வெய்ஸ் விமானச் சேவையானது பிரயாண விதிமுறைகளை இற்றைப்படுத்தியுள்ளதாகவும், அதில் கட்டாயம் Face-Shield அணிந்திருக்க வேண்டும் என்பதாக பகிரப்பட்டிருந்தது.

மேற்படி சமூக வலைதளப் பதிவானது போலியானதாகும், கத்தார் ஏர்வெய்ஸ்ஸில் பயணிப்பவர்கள் Face-Shield அணியத் தேவையில்லை. அதற்கு பதிலாக Medical Mask களைப் பாவித்தால் போதுமானது. அத்துடன் பயணிகள் தங்களுக்கு ஏற்ற Face-Maskகளை தாங்களே கொண்டு வர முடியும் கத்தார் ஏர்வெய்ஸ் என்பதாக  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சர்வதேச விமானச் சேவையை ஆரம்பித்த தலிபான்கள், கத்தாருக்கு முதல் விமானம் பயணிமாகியது

Leave a Reply