ஆப்கானிஸ்தான் தலிபான் வசமானது, யுத்தம் முடிந்து விட்டதாக உத்தியோக பூர்வ அறிவிப்பு!

Taliban says Afghanistan war over

யுத்தம் முடிவடைந்து விட்டதாக தலிபான்கள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தாலிபான் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் அல்−ஜசீரா ஊடக வலையமைப்பிற்கு இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தமது கட்டுப்பாட்டிற்குள் நேற்றை தினம் கொண்டுவந்த தலிபான்கள், நேற்றைய தினமே ஜனாதிபதி மாளிகையையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி, நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து பெருமளவிலானோர் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகிவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சர்வதேச சமூகத்துடன் அமைதியான உறவுகளை பேண, அனைத்து நாடுகளுக்கும் தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply