ஒலிம்பிக் பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய கத்தார் வீரர்களுக்கு செங்கம்பள வரவேற்பு!

Qatar Olympic Team returned
ஒலிம்பிக் பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய கத்தார் வீரர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு இரண்டு தங்கப்பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று தாயகம் திரும்பிக வீரர்களுக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

கத்தார் அதிபர் ஷெய்க் தமீம் பின் ஹமத் அவர்கள் பிரத்தியேக பிரதிநிதியாகிய அவரது சகோதரர், H H Sheikh Jassim bin Hamad Al Thani அவர்கள் ஒலிம்பிக் வீரர்களையும், கத்தார் ஒலிம்பிக் கமிட்டி தலைவரையும் நேரடியாக விமான நிலையம் சென்று வரவேற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில், கத்தார் சார்பாக 96 பிரிவு பாரம் தூக்குதலில், Fares Ibrahim அவர்கள் தங்கப்பதக்கத்தையும், ஆண்கள் உயரம் பாய்தலில் Mutaz Barshim அவர்கள் தங்கப் பதக்கத்தையும் வென்றதோடு, beach volleyball யில் ஒரு வெண்கலப்பதக்கமும் வெல்லப்பட்டிருந்தது. ஒலிம்பிக் போட்டியில் கத்தாருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தமை இதுவே முதற்தடவையாகும்.

Leave a Reply