கத்தாரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! இன்று (ஆக-19) 306 புதிய தொற்றாளர்கள்

Qatar Health Ministry

கத்தாரில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் (ஆகஸ்ட் – 19) தினம் புதிதாக 306 நபர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 198 பேர் பொதுமக்களில் இருந்தும், 108 பேர் வெளிநாடுகளிலிருந்து கத்தாருக்கு திரும்பியவர்களிடமிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் 241 பேர் கொரோனா சிகிச்சை நிலையங்களிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் எதுவித மரண சம்பவங்களும் பதிவாகவில்லை என்பதாக கத்தார் சுகாதார அமைச்சின் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை கத்தாரில் 230,221 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 226,803.குணமடைந்துள்ளனர். 2,817 சிகிச்சை மையங்களில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் சமூக வலைதளங்களைப் பாவிப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

Leave a Reply