கொரோனாவுக்கெதிரான சிறப்பாக செயற்பட்ட நாடுகள் பட்டியல், கத்தார் மத்திய கிழக்கில் முதல் இடம், உலகளவில் 15ம் இடம்

கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் வளைகுடா நாடுகளில் கத்தார் நாடு இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஜெர்மன் பத்திரிகையான ‘டெர் ஸ்பீகல்’ வெளியிட்டுள்ள பட்டியலில் பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது.

லக்சம்பர்க், நோர்வே, டென்மார்க், தாய்வான், போன்றவை இரண்டு முதல் நான்கு வரையான இடங்களைப் பெற்றுள்ளன

ஆசிய நாடுகளான தைவான் ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் ஆறாவது இடத்திலும், ஜப்பான் ஏழாவது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் கத்தார் உலகளவில் 15 வது இடத்தில் உள்ளது. அத்துடன் மத்திய கிழக்கில் கத்தார் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

கத்தாரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதத்திற்கு மேலானோருக்கு சிகிச்சை அளித்து முற்றிலுமாகக் குணப்படுத்தியதே அந்நாட்டின் சாதனையாகக் கருதப்பட்டு இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இதையும் படிங்க : கத்தாரில் நீண்ட நாட்களின் பின்னர் 100ஐ விட குறைவாகப் பதிவான கொரோனா தொற்று!

Leave a Reply