Qatar Tamil News
கத்தாரில் இதுவரை 2 மில்லியனுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

கத்தாரில் இதுவரை 2 மில்லியனுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கத்தார் தேசிய கொரோனா தடுப்பூசி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இதுவரை 2,013,080 பேர் ஒரு கொரோனா தடுப்பூசியையாவது பெற்றுக்கொண்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலயத்தில் 22,960 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கத்தாரில் 60க்கு மேற்பட்டவர்களில் 98.6 சதவீதம் கொனோரா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். கத்தாரில் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இப்போது கத்தார் பயணிக்க முன் நீங்கள் செய்ய வேண்டியது – டிஜிட்டல் வழிகாட்டல்