உலக நாடுகளில் மிக அதிக தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடாக ஐக்கிய அரபு அமீரகம் மாறியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை 15.5 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள மக்கள் தொகையில் 72.1% பேர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்தபடியாக சீஷெல்ஸ் நாட்டில் 71.7% பேர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (04) முதல் அவசர பயன்பாட்டிற்காக மாடர்னா தடுப்பூசிக்கு ஐக்கிய அமீரகம் அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே, ஐக்கிய அமீரகத்தில் ஆஸ்ட்ராசெனகா, பைசர் உள்ளிட்ட நான்கு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தடுப்பூசிகளை மக்கள் தெரிவு செய்யலாம் என்பது மட்டுமின்றி, அரசு சார்பில் இலவசமாகவே அளிக்கப்படுகிறது.