Qatar NewsQatar Tamil News

கத்தாரில் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 2 றியால்களைத் தாண்டியது – ஆகஸ்ட் மாத விலை விபரம்

2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கான எரிபொருள் விலைகள் (August Fuel Price) இன்று நள்ளிரவு முதல்  நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாக கத்தார் பெற்றோலியம் அறிவித்துள்ளது. அதன்  ஒரு லீட்டர் பெற்றோலின் விலை இரண்டு றியால்களைத் தாண்டியுள்ளது. 

ஜுலை ஜுன் மாதத்தில் 1.95 றியால்களாக விற்கப்பட்டு வந்த பிரீமியம் பெற்றோல் 10 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு 2.05 றியால்களாகவும், மற்றும் 2.00 றியால்களாக விற்கப்பட்டு வந்த சூபர் பெற்றோல் 10 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு 2.10 றியால்களாகவும் விற்கப்பட இருக்கின்றன. மேலும், 1.90 றியால்களாக விற்கப்பட்டு வந்த டீசல் விலை 5 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு 1.95 றியால்களாக விற்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அறிவித்தலை கத்தார் எரிசக்தி அமைச்சு உத்தியோக பூர்வ இணையத்திலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Qatar Fuel Price August

இதையும் படிங்க : கத்தாரில் வெளிநாட்டு தொழிலாளர்களின் தகுதிகாண் காலம் 9 மாதங்களாக அதிகரிப்பு!

Related Articles

Leave a Reply

Back to top button
%d