எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கத்தாரில் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும்!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கத்தாரின் வெப்ப நிலை கடுமையாக அதிகரிக்கும் என்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. கத்தார் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள சிறப்பு அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் தற்போது கடும் வெப்பத்துடன் கூடிய வானிலை நிலவுகின்ற போதும், தற்போதுள்ள வெப்பநிலையானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மேலும் அதிகரிக்கும் என்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழமையை விட 3 முதல் 4 வரையான பாகையளவு வெப்பநிலையானது அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் படி டோஹா நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெப்பநிலையானது 45 பாகையாக உயரம் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply